Responsive Advertisement 2

தொலைத் தொடர்புக் கோபுரத்தின் அடித்தளத்தை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ் ஆளுநருக்கு கடிதம்:

 



தொலைத் தொடர்புக் கோபுரத்தின் அடித்தளத்தை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ் ஆளுநருக்கு கடிதம்:

பதில் செயலாளரின் சொந்த செலவில் அகற்றுமாறும் கோரிக்கை
(எப்.அஸ்பர் சபா)
அட்டாளைச்சேனை சந்தை சதுக்கத்தில் சட்டவிரோமாக அமைக்கப்பட்டுள்ள தனியார் தொலைத் தொடர்புக் கோபுரத்தின் அடித்தளத்தை அகற்றுவதற்கு அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறும், அதற்கு ஏற்படும் செலவுகளை முன்னாள் பதில் செயலாளர் எம்.ஐ.எம்.பாயிஸிடமிருந்து அறவீடு செய்யுமாறும் கோரி சிரேஸ்ட ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ் அவர்கள் கிழக்கு மாகாண ஆளுநருக்கு கடிதம் ஒன்றினை ஆனுப்பிவைத்துள்ளார்.
அந்தக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அட்டாளைச்சேனை சந்தை சதுக்கத்தில் சட்டவிரோமாக அமைக்கப்பட்டுள்ள தனியார் தொலைத் தொடர்புக் கோபுரத்தின் அடித்தளத்தை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி சிரேஸ்ட ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ் அவர்கள் கடந்த வருடம் 224.01.29ம் திகதி இடம்பெற்ற அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் பிரேரணையை முன்வைத்திருந்தார். அப்பிரேரணை அன்று நிறைவேற்றப்பட்ட போதிலும் பதில் செயலாளரினால் கோபுரத்தின் அடித்தளம் இன்றுவரை அகற்றப்படவில்லை.
இவ்வாறான நிலையில் புதிய அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின்னர் அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் கடந்த 2025.01.16ம் திகதி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் ஏ.ஆதம்பாவா எம்.பி தலைமையில் இடம்பெற்றது. இதன் போதும் இவ்விடயம் அக்கூட்டத்தில் ஆராயப்பட்டது.
விரைவாக தொலைத் தொடர்புக் கோபுரத்தின் அடித்தளத்தை அகற்றுமாறு சபையோரினால் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. அத்தோடு குறித்த தொலைத் தொடர்புக் கோபுரத்தின் அடித்தளத்தை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தற்போதைய அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பதில் செயலாளர் எல்.எம்.இர்பான் அவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதேச சபையின் தவிசாளருக்கும், சபை உறுப்பினர்களுக்கும் தெரியாமல் எவ்வித ஒப்பந்தங்களும் செய்யாமல் முன்னாள் பதில் செயலாளர் எம்.ஐ.எம்.பாயிஸினால் அனுமதியளிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட தனியார் தொலைத் தொடர்புக் கோபுரம் அமைக்கும் பணி பொதுமக்களினதும், ஊடகங்களினதும் பெரும் எதிர்ப்பினால் கைவிடப்பட்டிருந்தது. ஆனால் இன்றுவரை அதன் அடித்தளம் அகற்றப்படவில்லை.
எனவே, சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தனியார் தொலைத் தொடர்புக் கோபுரத்தின் அடித்தளத்தை உடன் அகற்றுவதற்கு அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு உத்தரவிடுவதுடன் அதற்காக ஏற்படும் மொத்த செலவுகளையும் இறக்காமம் பிரதேச சபையின் பதில் செயலாளரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் பதில் செயலாளருமான எம்.ஐ.எம்.பாயிஸ் என்பவரிடமிருந்து அறவீடு செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் கௌரவ ஆளுநரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
தொலைத் தொடர்புக் கோபுரத்தின் அடித்தளத்தை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ் ஆளுநருக்கு கடிதம்: தொலைத் தொடர்புக் கோபுரத்தின் அடித்தளத்தை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ் ஆளுநருக்கு கடிதம்: Reviewed by Admin on January 31, 2025 Rating: 5

No comments:

Responsive Advertisement 3