அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலும் படு தோல்வியை சந்திக்கப்போகும் அரபா வட்டாரமும்
(ஏ.அர்சாத் - அட்டாளைச்சேனை -01)
எதிர் வரும் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் அரபா வட்டாரமானது 01 , 08 , 10 ஆகிய மூன்று பிரிவுகளை உள்ளடங்கிய வட்டாரமாகும். இந்த வட்டாரத்தை கடந்த முறை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியது. ஆனால் இம்முறை அவ்வாறு அமையாது. கடந்த முறையை விட இம்முறை NPP யின் ஆதிக்கம் அந்த வட்டாரத்தில் அதிகமாக காணப்படுகின்றது. மேலும் அந்த வட்டாரத்தில் NPP சார்பாக போடப்போகும் வேட்பாளரை பொறுத்து அதன் வாக்கு வங்கி உயர்வடையும். இதனால் முஸ்லிம் காங்கிரஸின் வாக்குகளே சரிவடையும். அது மட்டும் இல்லாமல் ஏனைய கட்சிகளான,
# டெலிபோன்
# அதாவுல்லா அணி
# முசாரப் அணி
# கேஸ் சிலிண்டர்
# இதர கட்சி , சுயேட்சைக் குழுக்கள் போட்டியிட உள்ளன. இக் கட்சிகள் யாவும் வட்டாரத்தை வெற்றி பெற முடியாவிட்டாலும் மேலதிக ஆசனத்தை குறிவைத்து பலமான வேட்பாளர்களை நிறுத்தும். இதனால் மேலும் அதாவது 100 க்கு 90% முஸ்லிம் காங்கிரஸின் வாக்குகளே சரிவடையும்
கடந்த 2024 பொதுத் தேர்தலில்
# பிரிவு 01 ல் 584
# பிரிவு 08 ல் 1223
# பிரிவு 10ல் 786 வாக்குகளே அளிக்கப்பட்டது.
எதிர் வரும் தேர்தலில் மேற்கூறிய எண்ணிக்கையிலான வாக்குகளே அளிக்கப்பட சாத்தியமானது.
அந்த வகையில் 600 வாக்குகள் மாத்திரம் அளிக்கப்பட சாத்தியமான பிரிவு 01ல் இருந்து முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக இப்போதுள்ள வேட்பாளரை மீண்டும் நிறுத்தினால் பலமான வேட்பாளர் இன்மை , உட்கட்சியில் நிலவும் வேட்பாளர் அதிருப்தி காரணமாக மேலும் முஸ்லிம் காங்கிரஸின் வாக்கு சரிவடையும்...
ACMC கட்சியான பிரிவு 08 அதிக வாக்கு அதாவது 1300 வாக்குகளுக்கு மேல் அளிக்கப்படக் கூடிய 08ம் பிரிவு சார்பாக முன்னால் பிரதேச சபை உறுப்பினர் சகோதரர் SL முனாஸ் அவர்களை நிறுத்தினால் . பிரிவு 10ல் அதிகப்படியான உறவினர்களை கொண்டிருப்பது , 10ம் பிரிவில் திருமணம் அவரின் செல்வாக்கு அதிகமாக காணப்படுவது , பல பக்கங்களாக சிதறடிக்கப்படப்போகும் மூ .காவின் வாக்கு , வட்டாரத்தில் சிதறடிக்கப்பபடாமல் இருக்கும் ACMC யின் வாக்கு வங்கி இவை யாவையும் ACMC கட்சியானது சாதகமான பயன் படுத்தினால் அக்கட்சியே இலகுவாக வெற்றி பெரும் .
தவறும் பட்சத்தில் ACMC யா ? இல்லை NPP கட்சியா ? என்ற போட்டி நிகழும் . ஆக மொத்தத்தில் இம்முறை அரபா வட்டாரத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி படு தோல்வியடைந்து மூன்றாம் நிலை அடைவது உறுதி......
அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலும் படு தோல்வியை சந்திக்கப்போகும் அரபா வட்டாரமும்
Reviewed by Admin
on
February 21, 2025
Rating:

No comments: