Responsive Advertisement 2

அட்டாளைச்சேனை எஸ்டோ அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு




அட்டாளைச்சேனை எஸ்டோ அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

( யூ.எல்.சிப்லியா )
அட்டாளைச்சேனை எஸ்டோ அமைப்பினால் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு  அமைப்பின் காரியாலயத்தில் அதன் தலைவரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான எஸ்.எம்.அறூஸ் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், பிரதம அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.ஜீ.அர்சாத் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
கௌரவ அதிதிகளாக அட்டாளைச்சேனை 9ம் பிரிவின் கிராம நிலதாரி என்.எம்.ஜிப்ரி, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எச்.அறபாத், பொலிஸ் உத்தியோகத்தர் யூ.எல்.மனாப், அமைப்பின் செயலாளர் ஏ.ஆர்.எம்.சியாத், பொருளாளர் எம்.எல்.எம்.சாதீக், பிரதித் தலைவர் ஏ.எஸ்.எம்.உனைஸ், உப செயலாளர் எப்.அஸ்பர் சபா, சமூக சேவையாளர் ஏ.எம்.ஜெமீல் , புறத்தோட்டம் சனசமூக நிலையத்தின் உப தலைவர் எம்.எஸ்.அஹமட் லெப்பை, உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதன்போது பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரங்கள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டதுடன் சமூக சேவையில் பல்வேறு பணிகளை ஆற்றிவரும் அமைப்பின் தலைவர் எஸ்.எம்.அறூஸ் மற்றும் செயலாளர் ஏ.ஆர்.எம்.சியாத் ஆகியோர் சமூக சேவை உத்தியோகத்தரால் இங்கு நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
கல்வி சமூக அபிவிருத்தி அமைப்பு (எஸ்டோ) கடந்த பல வருடங்களாக அட்டாளைச்சேனை பிரதேசத்தில் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை தொடர்ச்சியாக முன்னடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.



























அட்டாளைச்சேனை எஸ்டோ அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு அட்டாளைச்சேனை எஸ்டோ அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு Reviewed by Admin on February 10, 2025 Rating: 5

No comments:

Responsive Advertisement 3