அபு அலா, எஸ்.எம்.முபீன்
அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்குட்பட்ட பிரிவில் இயங்கி வருகின்ற முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களுக்கு சுகாதார அபிவிருத்தி தொடர்பான ஆலோசனை வழிகாட்டி விழிப்புணர்வு நிகழ்வு அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் (27) இடம்பெற்றது.
அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எம்.எம்.இஸ்ஸடீன் தலைமையில் இடம்பெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரிவுக்குற்பட்ட முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பொறுப்பதிகாரிகள் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
இதன்போது, முன்பள்ளி பாடசாலை எவ்வாறு அமையவேண்டும், அப்பாடசாலையில் எவ்வாறான விடயங்கள் உள்ளடங்க வேண்டும் என்ற விழிப்புணர்வு தகவல்களை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எம்.எம்.இஸ்ஸடீன் வழங்கி வைத்தார்.
மேலும் சிறுவர்களுக்கான பாதுகாப்பு, அவர்களுக்குத் தேவையான வசதி வாய்ப்புகள் போன்றவற்றை எவ்வாறு செய்து கொடுக்க வேண்டும் என்றும் அவர்களுக்கான நற்பண்புகள், நல்லெண்ணங்கள், நற்சிந்தனைகள் போன்றவற்றை எவ்வாறு போதிக்க வேண்டும் என்றும் அவர் தெளிவுப்படுத்தினார்.
அத்துடன் அவர்களுக்குத் தேவையான போசாக்கு நிறைந்த உணவுப் பழக்கவழக்கங்களையும் ஏற்படுத்த வேண்டும் என்றும் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எம்.எம்.இஸ்ஸடீன் எடுத்துரைத்தார்.
முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களுக்கு சுகாதார அபிவிருத்தி ஆலோசனை விழிப்புணர்வு நிகழ்வு!
Reviewed by Admin
on
February 28, 2025
Rating:

No comments: