இறக்காமம் பிரதேச சபையின் பதில் செயலாளர் பாயிசின் ஊழல் மோசடிக் கோவை கிழக்கு முதலமைச்சரின் செயலாளரிடம் நேரில் கையளிப்பு
அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களின் ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள் மற்றும் பிரதேச சபைகளின் செயலாளர்கள் பங்கேற்ற 2025ம் ஆண்டுக்கான திட்ட நடவடிக்கை தொடர்பான கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை அம்பாறை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் பைசல் ஆப்தீன் தலைமையில் நடைபெற்றது.
இன்று மதியம் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் காரியாலயத்திற்குச் சென்ற தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான எஸ்.எம். அறூஸ், கிழக்கு முதலமைச்சின் செயலாளர் பைசல் ஆப்தீன் அவர்களை நேரில் சந்தித்து அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் செயலாளர் எம்.ஐ.எம். பாயிஸ் அட்டாளைச்சேனை பிரதேச சபையில் செய்த நிதி, நிர்வாக ஊழல் மோசடிகள் குறித்த கோவைகளை நேரடியாக கையளித்து பாயிசிற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கூறினார். அதற்குப்பதிலளித்த முதலமைச்சின் செயலாளர், ஏற்கனவே பாயிசினால் செய்யப்பட்டதாக கூறப்படும் ஊழல் முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக குழு அமைத்துள்ளதாகவும், கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
ஏற்கனவே பதில் செயலாளர் பாயிசின் ஊழல் மோசடிகள் தொடர்பான கோவைகள் அம்பாறை மாவட்ட செயலத்தில் வைத்து அண்மையில் கிழக்கு மாகாண ஆளுநருக்கும், உள்ளூராட்சி ஆணையாளருக்கும் வழங்கியிருந்த நிலையில், இன்று முதலமைச்சின் செயலாளருக்கும் அக்கோவைகள் வழங்கப்பட்டுள்ளன.
முன்னாள் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மணிவண்ணன் ஊழல்வாதி பாயிசை பாதுகாத்து அடைக்களமிட்டது போன்று தற்போதைய முதலமைச்சின் செயலாளர், உள்ளூராட்சி ஆணையாளர் போன்றோர் செயற்படமாட்டார்கள் என நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது.
இக்கூட்டத்திற்கு உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி, பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.எல்.ஏ. கமல் நெத்மினி, கல்முனை மாநகர சபையின் ஆணையாளர் ஏ.டி.எம்.ராபி, உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம்,அம்பாறை மாவட்ட பிரதேச சபைகளின் செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இறக்காமம் பிரதேச சபையின் பதில் செயலாளர் பாயிசின் ஊழல் மோசடிக் கோவை கிழக்கு முதலமைச்சரின் செயலாளரிடம் நேரில் கையளிப்பு
Reviewed by Admin
on
February 28, 2025
Rating:

No comments: