Responsive Advertisement 2

உள்ளுராட்சி மன்றங்களை நற்பெயரோடு கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன் -அக்கரைப்பற்று பிரதேச சபை நிகழ்வில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.எல்.அஸ்மி தெரிவிப்பு

 



(எஸ்.எம்.அறூஸ்)

உள்ளுராட்சி மன்றங்களை மேம்படுத்தல் திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று பிரதேச சபைக்கு உலக வங்கியினால் ஒதுக்கப்பட்ட  ஐந்து கோடி  ரூபாய் நிதியில் கட்டப்பட்ட திறன்விருத்தி அபிவிருத்தி நிலையம் நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டது.

அகக்ரைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் எல்.எம்.இர்பான் தலைமையில் இடம்பெற்ற திறப்பு விழா நிகழ்வில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நிலையத்தை திறந்து வைத்தார்.
 
இந்நிகழ்வில் விசேட அதிதியாக எல்.டி.எஸ்.பி திட்டத்தின் திட்ட பொறியியலாளர் பி.அச்சுதன் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக அம்பாரை மாவட்டத்திலுள்ள பிரதேச சபைகளின் செயலாளர்கள் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் அக்கரைப்பற்று அமைப்பாளர் அபுசஹிட்,  செயற்பாட்டாளர் ராஸி அஹமட் உள்ளிட்ட கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இங்கு மாணவர்களின் வரவேற்பு நடன நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பிரதேச சபை செயலாளர் எல்.எம்.இர்பான் மற்றும் உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.எல்.அஸ்மி ஆகியோர் உரையாற்றினர்.

அத்தோடு இத்திட்டத்தை வெற்றிகரமாக செய்வதற்கு பங்களிப்புச் செய்த எல்.டி.எஸ்.பி திட்டப் பொறியியலாளர் பி.அச்சுதன், பிரதேச சபை செயலாளர் எல்.எம்.இர்பான் மற்றும் உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.எல்.அஸ்மி ஆகியோர் இங்கு நினைவுச்சின்னம் வழங்கி பாராட்டிக் கௌரவிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.
குறைந்த வருமானத்தைக் கொண்ட அக்கரைப்பற்று பிரதேச சபைக்கு இப்புதிய கட்டிடத்தின் மூலம் கூடுதலான வருமானத்தைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இங்கு கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.எல்.அஸ்மி அவர்கள் உரையாற்றும்போது, இம்மாகாணத்தில் உள்ளுராட்சி மன்றங்களை நற்பெயரோடு கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். என்மீது மிகப்பெரும் எதிர்பார்ப்பையும் கிழக்குப் பிராந்திய உள்ளுராட்சி மன்றங்கள் கொண்டுள்ளது. அவர்களுடைய தேவைப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்காக என்னாளான பணிகளையும், முயற்சிகளையும் செய்வேன்.
அத்தோடு அக்கரைப்பற்று பிரதேச சபையும் பல தேவைப்பாடுகளைக் கொண்டுள்ளது. இங்கு பொதுச்சந்தை ஒன்று இல்லை என்பதையும் நான் நன்கறிவேன். அதனை நிவர்த்தி செய்வதற்கான பொறுப்பும் எனக்குள்ளது. 

எல்.டி.எஸ்.பி திட்டம் நவம்பருடன் முடிவடைந்துள்ளது. உலக வங்கியின் பிரநிதிகள் ஜனாதிபதி அவர்களை சந்தித்துக் கலந்துரையாடியபோது, வடக்கிற்கும், கிழக்கிற்கும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பக்கூடிய ஏதாவதொரு திட்டத்தை செயற்படுத்துமாறு கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். இதற்காக நாட்டின் ஜனாதிபதிக்கு நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளோம்.இதன் காரணமாக கிழக்கு மாகாண ஆளுநரையும், பிரதம செயலாளரையும், சந்தித்துவிட்டு இரண்டாம் கட்ட நகர்வில் இருக்கின்றனர். அவ்வாறான பொருளாதாரத்தை மீட்டெடுக்கின்ற, கிராமிய பொருளாதார கட்டியெழுப்புகின்ற திட்டத்தின் கீழ் பொருளாதார மையங்களை நாம் ஏற்படுத்தலாம். அவ்வாறான மையங்கள் ஏற்படுத்தப்படுகின்றபோது அக்கரைப்பற்று பிரதேச சபைக்காக ஒரு பொதுச்சந்தையை உருவாக்க முடியும் என்ற எண ;ணம் எனக்குள் இருக்கின்றது என்தையும் இங்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும், உள்ளுராட்சி மன்றங்களைப்பற்றி மக்களின் பார்வை இன்று மாற்றமாக இருப்பதை அவதானிக்கின்றோம். இதனை இல்லாமல் செய்வதற்காக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும். நாம் பெற்றுக்கொள்ளும் சம்பளத்தைக் கொண்டு நமது வாழ்க்கையைக் கொண்டு நடத்தலாம். மாறாக ஊழல் செய்து பணம் உழைப்பதால் மார்க்கத்தைக்கூட ஏமாற்றுகின்றோம். உரிய நேரத்திற்கு காரியாலயத்திற்கு வந்து பணியாற்றுவதால் வினைத்திறனான நிர்வாக செயல்பாட்டை அடைந்து கொள்ளலாம்.

ஏதிர்வரும் வாரங்களில் ஒவ்வொரு சபைகளுக்கும் விஜயம் செய்து உங்களது செயற்பாடுகளை அவதானிக்கவுள்ளேன் எனவும் குறிப்பிட்டதுடன் மிக அழகான முறையில் கட்டப்பட்டுள்ள இப்புதிய கட்டிடத்தை அமைப்பதற்காக பணியாற்றிய பிரதேச சபை செயலாளர் எல்.எம்.இர்பான் மற்றும் அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்து பாராட்டிப் பேசினார்.







































உள்ளுராட்சி மன்றங்களை நற்பெயரோடு கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன் -அக்கரைப்பற்று பிரதேச சபை நிகழ்வில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.எல்.அஸ்மி தெரிவிப்பு உள்ளுராட்சி மன்றங்களை நற்பெயரோடு கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன் -அக்கரைப்பற்று பிரதேச சபை நிகழ்வில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.எல்.அஸ்மி தெரிவிப்பு Reviewed by Admin on March 01, 2025 Rating: 5

No comments:

Responsive Advertisement 3