(எஸ்.எம்.அறூஸ்)
உலக அவசர நிதி உதவி திட்டத்தின் கீழ் ஹெல்ப் ஏஜ் நிறுவனத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி உதவியின் மூலம் கடந்த ஆண்டு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அட்டாளைச்சேனை பிரதேச முதியோர்களுக்கான உலர் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதிகள், மாற்று திறனாளிகளுக்கான உபகரணங்கள் என்பன நேற்று அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பீ.ரி.எம். இர்பான் அவர்களின் வழிகாட்டலில் உதவி பிரதேச செயலாளர் நஹீஜா முசாபிர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஹெல்ப் ஏஜ் நிறுவனத்தின் நிகழ்ச்சிதிட்ட தலைவர் எம்.எஸ். சமிந்த டீ சில்வா, கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பாளர் திரு. ஜே.எம்.டி. தனஞ்சய பண்டார நிர்வாக உத்தியோகத்தர் எம்.சலீம், சமூகசேவைகள் உத்தியோகத்தர் ஏ.ஜீ.அர்ஸாத் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
முதியோர்களுக்கான உலர் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைப்பு
Reviewed by Admin
on
March 07, 2025
Rating:

No comments: