Responsive Advertisement 2

SLC இருபதுக்கு 20 லீக் தொடரின் இறுதிப் போட்டி இன்று

 



ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நடத்தும் இருபதுக்கு 20 லீக் (SLC T20 League) தொடரின் இறுதிப் போட்டி இன்று (16) இடம்பெறவுள்ளது. 


எஸ்.எல்.சி கிரீன்ஸ் மற்றும் எஸ்.எல்.சி கிறேஸ் ஆகிய அணிகள் இந்த இறுதிப் போட்டியில் மோதவுள்ளன. 

இந்தப் போட்டியானது கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 

புளூஸ், கிரீன்ஸ் மற்றும் கிறேஸ் ஆகிய 3 அணிகளும் இந்த தொடரின் முதல் சுற்றில் விளையாடியிருந்தன. 

இந்த அணிகளுக்கு இடையில் 4 போட்டிகள் இடம்பெற்றிருந்த நிலையில் அதில் கமிந்து மெண்டிஸ் தலைமையிலான கிரீன்ஸ் அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்றதுடன் ஒரு போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்திருந்தது. 

அதனடிப்படையில் அந்த அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளது. 

இரண்டாம் இடத்தில் உள்ள சரித் அசலங்க தலைமையிலான கிறேஸ் அணி 2 போட்டிகளில் வெற்றிபெற்றிருந்தது. 

இதன்படி குறித்த இரண்டு அணிகளும் இன்றைய இறுதிப் போட்டியில் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
SLC இருபதுக்கு 20 லீக் தொடரின் இறுதிப் போட்டி இன்று SLC இருபதுக்கு 20 லீக் தொடரின் இறுதிப் போட்டி இன்று Reviewed by Admin on August 16, 2025 Rating: 5

No comments:

Responsive Advertisement 3