Responsive Advertisement 2

இணக்கப்பாடின்றி முடிவடைந்த அமைதிப் பேச்சுவார்த்தை

 


ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் இடையில் இடம்பெற்ற அமைதி பேச்சுவார்த்தை எவ்வித இணக்கப்பாடும் இன்றி நிறைவடைந்துள்ளது. 


ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்காக இலங்கை நேரப்படி இன்று (16) அதிகாலை அலாஸ்காவில் குறித்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது. 

இதன்போது இரு உலக வல்லரசுகளும் சுமார் 3 மணி நேரம் கலந்துரையாடி இருந்த நிலையில் எவ்வித உடன்படிக்கைகளும் எட்டப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது. 

இருப்பினும், பேச்சுவார்த்தைக்குப் பிறகு எந்த பொது அறிக்கையையும் இரண்டு நாடுகளும் வெளியிடப்படவில்லை. 

இந்த முக்கியமான சந்திப்புக்குப் பிறகு ஒரு ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெறும் என்று வெள்ளை மாளிகை முன்னதாக அறிவித்திருந்த போதிலும், இரண்டு ஜனாதிபதிகளும் எவ்வித அறிவிப்புகளை வௌியிடாமல் வௌியேறியிருந்தனர். 

எவ்வாறாயினும் இந்த அமைதி பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஷெலென்ஸ்கி அழைக்கப்பட்டிருக்கவில்லை. 

எனினும் இந்த சந்திப்பு இடம்பெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், உக்ரைன் ஜனாதிபதியும், அமெரிக்க ஜனாதிபதி மற்றும் ஐரோப்பிய தலைவர்களும் கலந்துரையாடியிருந்தனர். 

இதன்போது ஐரோப்பிய தலைவர்கள் உக்ரைன் ஜனாதிபதியின் கோரிக்கைக்கு தமது வலுவான ஆதரவை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இணக்கப்பாடின்றி முடிவடைந்த அமைதிப் பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி முடிவடைந்த அமைதிப் பேச்சுவார்த்தை Reviewed by Admin on August 16, 2025 Rating: 5

No comments:

Responsive Advertisement 3