Responsive Advertisement 2

பொத்திவில் ஆதார வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்தியராகவும், பதில் வைத்திய அத்தியட்சகராகவும் சிரேஷ்ட வைத்தியர் இஸ்ஸடீன் கடமையேற்பு!




அபு அலா 

அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய வந்த சிரேஷ்ட வைத்தியர் ஏ.எம்.எம்.இஸ்ஸடீன் பொத்திவில் ஆதார வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்தியராகவும், பதில் வைத்திய அத்தியட்சகராக தனது கடமையை (04) பொறுப்பேற்றுக்கொண்டார்.

அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரியாக இருந்த காலங்களில் "வளமான சமூகத்தை உருவாக்கல்" எனும் தொனிப்பொருளில் அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், திராய்க்கேணி, ஆலிம்நகர், ஆலங்குளம், சம்புநகர், தீகவாபி போன்ற பிரதேசங்களில் வாழும் மக்களின் காலடிக்குச் சென்று பல்வேறுபட்ட விழிப்புணர்வு செயற்திட்டங்களையும் 
சிறுவர்களுக்கான மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து உணவு வழங்கள் முறைமைகள் தொடர்பாகவும், தாய் சேய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகளையும் முன்னெடுத்துச் சென்றார்.

பொத்திவில் ஆதார வைத்தியசாலையில் முதல் வைத்திய அத்தியட்சகராகவும், சுகாதார வைத்திய அதிகாரியாகவும், திருக்கோவில், கோமாரி, நிந்தவூர், கொழும்பு தேசிய வைத்தியசாலை போன்ற இடங்களில் கடமையாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொத்திவில் ஆதார வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்தியராகவும், பதில் வைத்திய அத்தியட்சகராகவும் சிரேஷ்ட வைத்தியர் இஸ்ஸடீன் கடமையேற்பு!  பொத்திவில் ஆதார வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்தியராகவும், பதில் வைத்திய அத்தியட்சகராகவும் சிரேஷ்ட வைத்தியர் இஸ்ஸடீன் கடமையேற்பு! Reviewed by Admin on September 08, 2025 Rating: 5

No comments:

Responsive Advertisement 3