SLMC கட்சியின் அட்டாளைச்சேனை மத்திய குழுவின் விசேட கூட்டம் நேற்று மாலை 5.00 மணிக்கு MPCS மண்டபத்தில் மத்திய குழுவின் தலைவர் ஹலீம் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
இக்கூட்டத்தில் கட்சியின் பிரதித் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர், உயர்பீட உறுப்பினர் யூ.எம்.வாஹிட், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், கிளைக்குழு உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.
இதேவேளை, இன்று நடைபெற்ற மத்திய குழுக்கூட்டத்தை நடத்தவிடாமல் தடுப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாக சொல்லப்பட்ட நிலையிலும், மத்திய குழுக்கூட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments: