Responsive Advertisement 2

ஐக்கிய தேசிய கட்சி எடுத்துள்ள புதிய தீர்மானம்

 


ஆரம்பக் கட்ட கலந்துரையாடல்களின் இணக்கப்பாட்டுக்கு அமைய ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பிற எதிர்க்கட்சிகளுடன் தொடர்ந்து பணியாற்ற ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது. 


இதற்காக ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட பிற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற குழு அல்லது இதே போன்ற பொறிமுறையின் மூலம் பணியாற்றவும் ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டுள்ளது. 

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பிற எதிர்க்கட்சிகளுடன் பொதுவான பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகளுடன் ஐக்கிய தேசியக் கட்சி, நீண்ட காலமாக கலந்துரையாடி வருகிறது. 

அந்தக் கலந்துரையாடல்களின் இணக்கம் ஏற்பட்ட விடயங்களை தொடர்ந்து செயல்படுத்த ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். 

அதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் வெளிப்படையாகப் பணியாற்ற முடிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி எடுத்துள்ள புதிய தீர்மானம் ஐக்கிய தேசிய கட்சி எடுத்துள்ள புதிய தீர்மானம் Reviewed by Admin on September 08, 2025 Rating: 5

No comments:

Responsive Advertisement 3