Responsive Advertisement 2

மாபெரும் இலவச மருத்துவ முகாம்

 


கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு ஏற்பாடு செய்துள்ள மாபெரும் இலவச மருத்துவ முகாம் எதிர்வரும் (2025.09.14) ஞாயிற்றுக்கிழமை திருக்கோவில் தாண்டியடி விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது.


இதில் விசேட வைத்திய நிபுணர்களின் சேவைகள், பல் மருத்துவ சேவை, தொற்று நோய் மற்றும் தொற்றா நோய் பரிசோதனைகள், சுகாதாரக் கல்வி உட்பட விழிப்புணர்வு நிகழ்வுகள், அத்துடன் பார்வை குறைபாடுள்ளவர்களுக்கு மூக்குக்கண்ணாடி வழங்குதல், பரிந்துரைக்கப்பட்ட நபர்களுக்கு காது கேட்கும் கருவி வழங்குதல், விசேட தேவையுடையவர்களுக்கு சக்கர நாற்காலிகள், நடைப் பயிற்சி கருவிகள் வழங்குதல் என மேலதிகமாகவும் பல்வேறு சேவைகள் வழங்குவதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறிப்பாக திருக்கோவில், ஆலையடிவேம்பு மற்றும் பொத்துவில் பிரதேசத்தில் உள்ள மக்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை தவறவிடாது சகலரும் பங்கேற்போம் பயன்பெறுவோம்.
மாபெரும் இலவச மருத்துவ முகாம் மாபெரும் இலவச மருத்துவ முகாம் Reviewed by Admin on September 11, 2025 Rating: 5

No comments:

Responsive Advertisement 3