Responsive Advertisement 2

மெளலவி ஆசிரியர் வெற்றிடங்களின் விபரங்களை வழங்கத் தவறிய மாகாணங்கள்



மெளலவி ஆசிரியர் வெற்றிடங்களின் விபரங்களை வழங்கத் தவறியதால் 211 வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோர முடியாத


நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொதுச் சேவைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.





மௌலவி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்களை கோருவதற்கு கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்திருக்கும் நிலையில் கிழக்கு மாகாணம் உட்பட ஐந்து மாகாண சபைகள் வெற்றிட விபரங்களை பொதுச்சேவைகள் ஆணைக்குழுவுக்கு வழங்கத் தவறியுள்ளது.





இதனால் 211 வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுச் சேவைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.





வெற்றிட விபரங்கள் கிடைக்கப் பெற்றிருக்கும் நான்கு மாகாணங்க ளுக்கும், தேசியப் பாடசாலைகளுக் குமான விண்ணப்பங்களை கோரும் வர்த்தமானி அறிவித்தல் நாளை மறு தினம் வெள்ளிக்கிழமை வெளிவரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





இதற்கமைய விபரங்கள் கிடைக்கப் பெற்ற மாகாணங்களின் வெற்றிடங் களுக்கான விண்ணப்பங்களை கல்வியமைச்சு கோரவுள்ளது.





விபரங்களை வழங்காத மாகாணங்கள் தொடர்பில் பொதுச்சேவைகள் ஆணைக்குழுவே தீர்மானம் எடுக்கவுள்ளது.





விண்ணப்பம் கோரப்படவிருக்கும் மாகாணங்களின் விபரங்கள் வருமாறு:


இதற்கமைய 




  • மத்திய மாகாணத்திலுள்ள தேசிய பாடசாலைகளில் நிலவும் 20 வெற்றிடங்கள்,

  • வடமேல் மாகாணத்தில் 41 வெற்றி டங்கள்,

  • வட மாகாணத்தில் 16 வெற்றிடங்கள், 

  • ஊவா மாகாணத்தில் 02 வெற்றிடங்களையும் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன..





கிழக்கு, வட மத்திய, மேல், சப்ர கமுவ, தென் மாகாணங்களே விபரங்களை வழங்க தவறியுள்ளன.





குறிப்பிட்ட ஐந்து மாகாணங்களும் இது விடயத்தில் உரிய கவனம் செலுத்தாததால் அம் மாகாணங்களிலுள்ள முஸ்லிம் பாடசாலைகளுக்கான மெளலவி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப முடியாத நிலை உருவாகியுள்ளது.





இந்த மாகாண சபைகளின் அசமந்த போக்கு குறித்து கல்வித்துறை சார் முஸ்லிம் அமைப்புகள் கடும் விசனத்தை தெரிவித்துள்ளன.




மெளலவி ஆசிரியர் வெற்றிடங்களின் விபரங்களை வழங்கத் தவறிய மாகாணங்கள் மெளலவி ஆசிரியர் வெற்றிடங்களின் விபரங்களை வழங்கத் தவறிய மாகாணங்கள் Reviewed by Admin on October 19, 2017 Rating: 5

No comments:

Responsive Advertisement 3