Responsive Advertisement 2

சர்வதேச விசேட தேவையுடையோர் தினம் வவுனியாவில் அனுஸ்டிப்பு


வடமாகாணத்தின் சர்வதேச விசேட தேவையுடையோர் தின நிகழ்வு வடக்கு சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வனஜா செல்வரட்ணம் அவர்களின் தலமையில் வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.





வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமான நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளின் நடனம், மற்றும் இத்தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட மாவட்ட, மாகாண மட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. இதன்போது மாற்றும் திறனாளிகளின் திறன்களை வெளிப்படுத்தும் கலை நிகழ்வும் இடம்பெற்றது.





இந் நிகழ்வில் வடமாகாணத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள், அரச அதிகாரிகள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.  





வவுனியா  செய்தியாளர்.











சர்வதேச விசேட தேவையுடையோர் தினம் வவுனியாவில் அனுஸ்டிப்பு சர்வதேச விசேட தேவையுடையோர் தினம் வவுனியாவில் அனுஸ்டிப்பு Reviewed by Admin on December 15, 2017 Rating: 5

No comments:

Responsive Advertisement 3