வவுனியாவில் சிறுவர் அபிவிருத்தி லங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் தாய் தந்தையரை இழந்த மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (16) மாலை 6.00 மணிக்கு வவுனியா ரம்பைக்குளத்தில் நடைபெற்றது.
'சந்தோசத்தையும் சுதந்திரத்தையும் உணர்வோம்' எனும் தொனிப்பொருளில் ஆண்டு நிறைவை முன்னிட்டு எச்.என்.டி நிறுவனத்தின் இயக்குனர் ரி.செந்தில் விமலன் தலமையில் நிகழ்வுகள் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக கெப்பற்றிக்கொலாவ நீதிமன்றத்தின் மாவட்ட நீதவான் ரி.ஜெ. பிரபாகரன் கலந்துகொண்டிருந்தார்.
சர்வ மதகுருக்களின் ஆசியுடன் நடைபெற்ற நிகழ்வில் நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றது.
வவுனியா மாவட்டத்தில் தாய் அல்லது தந்தையை இழந்த மற்றும் விசேட தேவைக்குட்பட்ட 125 பாடசாலை மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டது.
நிகழ்வில் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஜெ.ஜெயகென்னடி, இரம்பைக்குளம் ஆந்தோனியார் ஆலயத்தின் பங்குத்தந்தை எஸ்.சத்தியராஜ் பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்தகொண்டிருந்தனர்.
தாய் தந்தையரை இழந்த மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள்
Reviewed by Admin
on
December 17, 2017
Rating:
No comments: