(மாளிகைக்காடு நிருபர்)
கல்முனை கல்வி வலயத்திலிருந்து தரம் ஐந்து புலமைப்பரிசில் சாதனையாளர்களை உருவாக்கும் நோக்கில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் முகமாக ஈ.டீ யு.ப்ரீ அகடமி நிறுவனத்தினால் தரம் 05 யில் கல்வி பயிலும் இவ்வாண்டு (2022) புலமை பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான இலவச வினாத்தாள்கள் கல்முனை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் உப தலைவரும், அந்நிறுவனத்தின் கல்முனை பிரதேச இணைப்பாளருமான எம்.என்.எம்.அப்ராஸினால் கல்முனை கமு/கமு/ இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்திற்கு பாடசாலை அதிபர் எம்.ஜீ.எம். றிசாத் அவர்களிடம் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
இரண்டாம் கட்டமாக விநியோகிக்கப்பட்ட இந்த வினாத்தாள்கள் ஈ.டீ யு.ப்ரீ அகடமி நிறுவன பணிப்பாளர்களான ஐ.எம்.றொஸான் மற்றும் பாத்திமா ஸஹ்ரா நிஸ்பர் ஆகியோரின் வழிகாட்டுதலில் இடம்பெற்றது.
முதலாம் கட்டமாக கல்முனை கல்வி வலயத்தில் தெரிவு செய்யப்பட்ட கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு கல்விக்கோட்ட பாடசாலைகளுக்கு இந்த வினாத்தாள்கள் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வுகளில் கிழக்கு மாகாண கணனி தொழிநுட்ப பேரவை பணிப்பாளர் யூ.எல்.என். ஹுதா உமர் கலந்து கொண்டார்.
Reviewed by Admin
on
November 18, 2022
Rating:

No comments: