உஹன பொலிஸ் பிரிவிற் குட்பட்ட மகாகண்டிய பிரதேசத்தில் நீர் நிறைந்த குழியில் விழுந்து
ஒரு வயது 02 மாத வயதுடைய ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (08) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டுக்கு அருகில் உள்ள கழிவறைக்காக வெட்டப்பட்ட தண்ணீர் நிரம்பிய குழியில் குழந்தை தவறி விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
குழியில் விழுந்த குழந்தையை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உஹன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
உஹனையில் கழிவறைக்காக வெட்டப்பட்ட குழியில் விழுந்து ஒரு வயதுக் குழந்தை பலி
Reviewed by Admin
on
November 09, 2022
Rating:
Reviewed by Admin
on
November 09, 2022
Rating:

No comments: