Responsive Advertisement 2

அம்பாறை மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கான கலந்துரையாடல்

 





(எஸ்.எம்.அறூஸ்)

அம்பாறை மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கான வழிவகைகள் மற்றும் திட்டங்களை  தயாரித்து வடிவமைப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று அம்பாறை கச்சேரியில் இடம்பெற்றபோது பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் கலந்து கொண்டு காத்திரமான கருத்துக்களை முன்வைத்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் விரைவில் இடம்பெறவுள்ள அம்பாறை மாவட்டத்தில் சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்வதற்கான மகாநாட்டின் முன்னோடியாகவும், சமர்ப்பிக்கப்பட வேண்டிய திட்டங்கள், விடயதானங்கள் குறித்தும் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான W. வீரசிங்கவின் ஏற்பாட்டிலும் தலைமையிலும் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாஉல்லா, மாவட்ட அரசாங்க அதிபர் டக்ளஸ், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எச்.பி.அனீஸ், அம்பாரை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கமல் நெத்மினி,மற்றும் அரசாங்க அதிகாரிகள், சுற்றுலாத்துறை அமைப்பினர், பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.























அம்பாறை மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கான கலந்துரையாடல் அம்பாறை மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கான கலந்துரையாடல் Reviewed by Admin on May 08, 2023 Rating: 5

No comments:

Responsive Advertisement 3