Responsive Advertisement 2

இன்னும் 10 அல்லது 15 வருடங்களுக்காவது இந்த நாட்டைஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆள வேண்டும் - முசாரப் எம்.பி தெரிவிப்பு

 



(எஸ்.எம்.அறூஸ்)

இன்னும் 10 அல்லது 15 வருடங்களுக்காவது இந்த நாட்டை ஆளுகின்ற தலைவராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இருக்க வேண்டும். அதற்காக நாட்டு மக்கள் முழுமையான அதுரவை வழங்க வேண்டுமென திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முசாரப் தெரிவித்தார்.

பொத்துவில் அருகம்பே பிரதேசத்தில்  சுற்றுலாத்துறையை  அபிவிருத்தி செய்வதற்கான வழிவகைகள் குறித்த கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே பாராளுமன்ற உறுப்பினர் முசாரப் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், சிங்கப்புரின் லீகுவான்யு அந்த நாட்டின் வளர்ச்சிக்காக மக்கள் ஜனரஞ்சகமில்லாத பல தீர்மானங்களை எடுத்தபோது மக்கள் பலரும் அந்த தீர்மானங்களை மிகக்கடுமையாக விமர்சித்தனர்.

ஆனால் அன்று  லீகுவான்யு எடுத்த தீர்மானங்கள் நாட்டின் நலனுக்காகத்தான் என்பதை பின்னர்  எல்லோரும் புரிந்து கொண்டார்கள். இன்று சிங்கப்புரைச் செதுக்கிய சிற்பியாக அவரை அந்த நாட்டு மக்கள் போற்றுகின்றனர்.

அந்த வகையில்தான் நமது நாடும் மிகவும் கஸ்டமான நிலையில் இருந்தபோது நாட்டின் முன்னேற்றத்திற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனரஞ்சகமில்லாத பல தீர்மானங்களை எடுத்தார். அந்தத் தீர்மானங்களை பலரும் விமர்சித்தனர். இன்று அந்தத் தீர்மானங்கள்தான் நாட்டை மிக வேகமாக முன்னோக்கி நகர்த்துகின்றது என்பதை எல்லோரும் புரிந்து கொள்கின்ற நிலையைப் பார்க்கின்றோம்.

50 வருட பாராளுமன்ற அரசியலை அனுபவமாகக் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நாட்டு மக்களும், சர்வதேசமும் பெரும் நம்பிக்கை கொண்டுள்ளது. அந்த நம்பிக்கை இன்று வெற்றியடைந்து வருவதைப் பார்க்கி்ன்றோம்.

இன்று காலை ஜனாதிபதி அவர்களும் நாங்களும் பினாட்ஸ் பாம் மற்றும் சேர்பிங் பொய்ண் பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டோம். அங்கு மேற்கொள்ள வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி அவர்களின் செயல்திட்ட வடிவத்தை பார்த்து வியந்து போனோம்.

இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலந்துரையாடலில் உங்கள் பிரச்சினைகள், சவால்கள் தொடர்பிலும் அவருக்கு தெளிவான பார்வை உள்ளதுபோல் எவ்வாறான தீர்வை வழங்க வேண்டும் என்ற பொறிமுறையையும் கொண்டுள்ளார். அதனால் நிரந்தரத் தீர்வுக்கான முன்னெடுப்புகளையும், ஒருங்கினைப்பினையும் வெற்றிகரமாக செய்ய வேண்டும் என்பதையே இங்கு ஆராயவேண்டியுள்ளது என்றார்.

இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், ஜனாதிபதி செயலக பிரதானி சாகல ரத்நாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம்.அதாஉல்லா, வீரசிங்கஈ அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம,பொத்துவில் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் எம்.எச்.அப்துல் றஹீம்  உள்ளிட்ட அதிகாரிகள். சுற்றுலாத்துறை முக்கியஸ்தர்கள், அருகம்பே ஹோட்டல் உரிமையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு அருகம்பே சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கான வழிவகைகள் மற்றும் திட்டங்கள் குறித்தான கருத்துக்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததுடன் ஹோட்டல் உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்களையும் உன்னிப்பாகக் கேட்டறிந்து கொண்டார்.

நீண்டகாலமாக எதிர்நோக்கும் ஹோட்டல் காணி உரிமைத்துவம் தொடர்பான பிரச்சினைக்கு விரைவாக தீர்வைப் பெற்றுத்தருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்ததுடன் ஹோட்டல்களை விஸ்தரிப்பதற்கும், புதிதாக கட்டுவதற்கும் ஏதுவாக ஏற்பாடுகளை செய்து தருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.





 


 

 


 




இன்னும் 10 அல்லது 15 வருடங்களுக்காவது இந்த நாட்டைஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆள வேண்டும் - முசாரப் எம்.பி தெரிவிப்பு இன்னும் 10 அல்லது 15 வருடங்களுக்காவது இந்த நாட்டைஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆள வேண்டும் - முசாரப் எம்.பி தெரிவிப்பு Reviewed by Admin on August 25, 2023 Rating: 5

No comments:

Responsive Advertisement 3