(சபானா அபூபக்கர், சிப்லியா அறூஸ்)
அட்டாளைச்சேனை
பிரதேச செயலக கலாசார பேரவையின் ஒன்று கூடல் இன்று (11) அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்களான எம். எஸ். ஜவ்பர் மற்றும் எம். எஸ். றஜாயா அவர்களின் ஒருங்கிணைப்பில் உதவி பிரதேச செயலாளர் நஹீஜா முசாபிர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில்
பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் கே. பி. சலீம், கிராம நிர்வாக உத்தியோகத்தர் ஏ. எல். ஜவ்பர்,
கணக்காளர் றிபாஸ், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஏ. எல். தெளபீக்,
பேரவையின் பிரதித் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான எஸ். எம். அறூஸ் மற்றும் ஊடகவியலாளர்கள்,
கலைஞர்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும்
இக்கூட்டத்தில் பின்வரும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1 புதிய
நடப்பு ஆண்டுக்கான நிர்வாகத்தை தெரிவு செய்தல்.
2.தேசிய
மீலாத் தினத்தை சிறப்பிக்கும் வகையில் திறந்த மட்டத்திலான போட்டி நிகழ்ச்சிகளை நடத்துதல்.
3.புதிய
கலைஞர்களை அடையாளம் கண்டு இப்பேரவையுடன் இணைத்தல். அத்துடன் பிரதேச மட்டத்தில் காணப்படுகின்ற கலைஞர்களை துறை ரீதியாக அடையாளம் கண்டு அவர்களையும் புதிய விண்ணப்பங்கள் ஊடாக இந்நிகழ்ச்சி திட்டத்தில் உள்வாங்குதல்.
மேலும் கலைத்துறையில் ஈடுபட்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான ஓய்வுதியத் திட்டத்தில் முதன் முதலாக அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கிழக்கு மாகாண கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஓய்வுதியம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான காசோலையும் இங்கு உதவிப் பிரதேச செயலாளரினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


No comments: