Responsive Advertisement 2

அட்டாளைச்சேனை டி.பி.ஜயா வித்தியாலயத்திற்கு முசாரப் எம்.பி 10 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு

 


(எம்.ஜே.எம்.சர்ஜூன்)

அட்டாளைச்சேனை டி.பி.ஜாயா வித்தியாலய வகுப்பறைக் கட்டிடத்தை திருத்தியமைப்பதற்காக திகாமடுல்ல மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முசாரப் அவர்கள் சமார் 10 இலட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்து அதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரிடம் மத்திய குழு விடுத்த கோரிக்கையினை ஏற்று விசேட நிதியிலிருந்து சுமார் 10 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முசாரப் அவர்களின் வரவு - செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்தும் இரண்டு இலட்சம் ரூபா நிதி தளபாடக் கொள்வனவிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
அட்டாளைச்சேனை மக்களின் நலனில் எப்போதும் அக்கரை கொண்டு செயற்பட்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கு பாடசாலை சமூகம் மற்றும் பொதுமக்கள் தமது நன்றியைத் தெரிவித்துள்ளனர்.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் தமீம் ஆப்தீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் எஸ்.எம்.அறூஸ் இருவரும் மத்திய குழு ஊடாக இப்பாடசாலைக்கு நிதி ஒதுக்கீடு செய்யுமாறு முன்னாள் பாராளுமனற் உறுப்பினர் எஸ்.எம்.எம்.முசாரப் அவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.






அட்டாளைச்சேனை டி.பி.ஜயா வித்தியாலயத்திற்கு முசாரப் எம்.பி 10 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு அட்டாளைச்சேனை டி.பி.ஜயா வித்தியாலயத்திற்கு முசாரப் எம்.பி 10 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு Reviewed by Admin on October 13, 2024 Rating: 5

No comments:

Responsive Advertisement 3