Responsive Advertisement 2

பொத்துவிலில் அரச ஒசுசல திறப்பு - முஷாரப்பின் முயற்சியில் இன்னுமோர் தீர்வு.

 



பொத்துவிலில் அரச ஒசுசல திறப்பு - முஷாரப்பின் முயற்சியில் இன்னுமோர் தீர்வு.

மக்கள் கொடுத்த ஆணையை கொண்டு நமது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி முஷாரப் களமாடிய மற்றுமொரு தீர்வு இன்று (2024.10.13) நமக்கு கிட்டியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
பொத்துவில் பிராந்தியத்தில் உள்ள பொத்துவில், லஹூகல, பாணம, கோமாரி, ஊரணி உள்ளிட்ட மக்கள் அரசாங்கம் மானிய அடிப்படையில் குறைந்த விலையில் மருந்துகளை வழங்கும் ஒசுசல அரச மருந்தகம் இன்றி பல வருடங்களாக இன்னலுற்றனர்.
கடந்த காலங்களில் நமது அம்பாறை மாவட்டத்தில் பல ஒசுசல மருந்தகங்கள் திறக்கப்பட்ட போதும் கூட அதிகாரத்திலிருந்தவர்களால் நமது மக்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன.
அதன்பின்னர், அதிகாரத்திற்கு வந்த நமது முன்னாள் பா. உ. அவர்களிடம் இந்த கோரிக்கை கொண்டு செல்லப்பட்டது. ஆயினும், நாட்டினுடைய பொருளாதார நிலமைகள், கொரோனா பெருந்தொற்று, அரசியல் குழறுபடிகள் போன்றவற்றால் நிர்வாகத்தில் ஏற்பட்ட ஸ்தம்பிதங்களால் இதை தீர்வாக கொண்டு சேர்ப்பதற்கு அரும்பாடுபட வேண்டியேற்பட்டது.
அத்தனை இடர்களையும் வெற்றிகரமாக ஓடோடி கடந்து களமாடி, நமது முஷாரப் அவர்களால் இறுதிசெய்யப்பட்ட இந்த தீர்வு இன்று கனிந்திருக்கிறது.
சுகாதார அமைச்சினதும் அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபனத்தினதும் அதிகாரிகளாலும் இன்று அதிகாரப்பூர்வமாக இந்த ஒசுசல அரச மருந்தகம் திறந்து வைக்கப்பட்டது.
முன்னமே, பிராந்திய மக்களின் சுகாதார சேவை மேம்பாட்டிற்காக முஷாரப் அவர்களின் பெரு முயற்சியால், பொத்துவில் ஆதார வைத்தியசாலை மாகாண ஆளுகைக்குள் தரமுயர்த்தப்பட்டு பின்னர் சுகாதார அமைச்சின் நேரடி கண்காணிப்புகுள் தரமுயர்த்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
மக்கள் வழங்கிய ஆணையை கொண்டு குறிப்பிட்டு சொல்லும் படியான பல தீர்வுகளின் வரிசையில் இன்று அரச மருந்தகம் ஸ்தாபிப்பும் கைகூடியிருப்பதை இட்டு மக்கள் தங்கள் மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளியிட்டனர். முன்னாள் பா. உ. முஷாரப் அவர்களும் புதிதாக திறக்கப்பட்ட ஒசுசலவிற்கு மக்களால் அழைத்து செல்லப்பட்டார்.
நமது தீர்வு நாயகனின் `சொல் அல்ல - செயல்’ எனும் சிந்தாந்தம் இன்று மற்றுமொரு தடவை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
நமது அரசியல் கலைஞனை ஒன்றுபட்டு வென்றெடுப்போம்.
எழுவோம். இணைவோம். அடைவோம்.






பொத்துவிலில் அரச ஒசுசல திறப்பு - முஷாரப்பின் முயற்சியில் இன்னுமோர் தீர்வு. பொத்துவிலில் அரச ஒசுசல திறப்பு - முஷாரப்பின் முயற்சியில் இன்னுமோர் தீர்வு. Reviewed by Admin on October 13, 2024 Rating: 5

No comments:

Responsive Advertisement 3