Responsive Advertisement 2

அம்பாரையில் மயில் கட்சி ஆசனத்தைப் பெற்றுக்கொள்ளாது -   அரசியல் ஆய்வாளர் பாத்திமா சிபானா சரிபுதீன்



கடந்த ஜனாதிபதித் தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் இம்முறை போட்டியிடுகின்ற கட்சிகள் பெறச் சாத்தியமான ஆசனங்கள் பற்றித் தெளிவுறும் வகையில் இந்த ஆக்கம் அமைகின்றது.

ஜனாதிபதித் தேர்தல் 2024
கட்சிகள் பெற்ற வாக்குகள் அண்ணளவாக
--------------------------------------------------
NPP -109,000
SJB - 200,000 (SJB+ACMC+SLMC+Tamil parties)
Cylinder - 86,500
மொத்த ஆசனங்கள் - 7 (6+1 Bonus)
செல்லுபடியான வாக்குகள் - 4,23,000 வெட்டு புள்ளி 5℅ - 21, 000
ஒரு ஆசனத்திற்கான வாக்குகள்-
(4,23,000 - 21,000)÷6 = 67,000
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் ஜனாதிபதித் தேர்தலில் SJB பெற்ற வாக்குகள் பின்வருமாறு பிரிக்கப்படும்.
SJB - 53,000 ( ஜனாதிபதி தேர்தலில் SJB அம்பாறை தொகுதியில் பெற்ற வாக்குகள்)
Tamil parties - 44,000 ( கடந்த பொதுத் தேர்தலில் தமிழ் கட்சிகளுக்கு மொத்தமாக அ,ளிக்கப்பட்ட 50,000 வாக்குகளிலிருந்து; ஜனாதிபதித் தேர்தலில் ஏனைய வாக்காளர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குகளாக உத்தேசித்து 6 000 வாக்குகளைத் தள்ளுபடி செய்து கணிக்கப்பட்டது)
ACMC - 25,000 ( கடந்த பொதுத் தேர்தலில் ACMC பெற்ற 42,000 வாக்குகளிலிருந்து முஷாரஃப் இன் 17,000 விருப்பு வாக்குகளைப் புறந்தள்ளிக் கணிக்கப்பட்டது)
SLMC - 69,000 ( SJB யின் கூட்டணிக் கட்சிகளாக இருந்த SJB, ACMC, தமிழ் கட்சிகள் ஆகியவற்றின் வாக்குகளை; ஜனாதிபதித் தேர்தலில் SJBக்கு அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் இருந்து கழித்ததன் மூலம் பெறப்பட்டது)
இந்த வாக்குகளின் அடிப்படையில் ஆசனங்கள் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படும் என்பதை பார்ப்போம்.
முதற் சுற்று
----------------------
NPP - 1 ஆசனம் மீதி 42,000
Cylinder - 1 ஆசனம் மீதி 19,500
SLMC - 1 ஆசனம் மீதி 2000
இரண்டாம் சுற்று
--------------------------------
SJB - 53,000 - 1
NPP- 42,000 - 1
Tamil - 50,000 - 1( கடந்த பொதுத் தேர்தலின் முடிவுகளின் படி ஏதாவது ஒரு தமிழ்க் கட்சி 27,000ற்கும் அதிகமான வாக்குகளைப் பெறுவது சாத்தியம்)
ACMC - 25,000 - 0
Cylinder- 19,500 - 0
மொத்த ஆசனங்கள்
--------------------------------------
NPP - 2+1 Bonus = 3
Cylinder - 1
SLMC - 1
SJB - 1
Tamil - 1
இங்கு ஜனாதிபதி தேர்தலில் NPP அணியினருக்கு அளிக்கப்பட்ட வாக்குகளில் 60,000 அதிகமான வாக்குகள் அம்பாறை தேர்தல் தொகுதியில் இருந்து அளிக்கப்பட்டவை. 48,000 வாக்குகள் ஏனைய தொகுதிகளில் இருந்து அளிக்கப்பட்ட முஸ்லிம், தமிழ் வாக்குகள்.
அம்பாறை தேர்தல் தொகுதியில் இருந்து அளிக்கப்பட்ட இந்த 60,000 வாக்குகளும் பொதுத் தேர்தலில் மூன்று விருப்பு வாக்குகளையும் பிரயோகித்து அளிக்கப்படுகின்ற போது NPP அணியில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் என்பது சாத்தியமற்றது. (3 ஆசனங்களும் சிங்களப் பிரதிநிதித்துவங்களாக அமையும்)
அதேபோன்று SJB க்கு கிடைக்கவிருக்கின்ற பிரதிநிதித்துவமும் சிங்களப் பெரும்பான்மையினருக்குக் கிடைக்கப் போகின்றது.
எனவே இம்முறை திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் முஸ்லிம்களுக்குக் கிடைக்கச் சாத்தியமான ஆசனங்கள் இரண்டு மாத்திரமே.
- SLMC - 1
- Cylinder - 1 ( ஜனாதிபதித் தேர்தலில் பொத்துவில், சம்மாந்துறை, கல்முனைத் தொகுதிகளில் பெற்ற வாக்குகள் 61,000. இது முஸ்லிம் பிரதிநிதித்துவத்திற்கு சாதகமான நிலைமை)
இது கடந்த பொதுத் தேர்தலின் முடிவுகளுக்கு நேர் எதிரானது.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற ஒரே ஒரு மாவட்டமான அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களின் விகிதத்திற்கு முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாமலாக்கப்படுவதற்கு NPP க்கு அளிக்கப்படுகின்ற முஸ்லிம் வாக்குகள் காரணமாக அமையப் போகின்றது.
இந்த நிலைமையை மாற்றி முஸ்லிம் சமூகத்தை ஒற்றுமைப்படுத்தித் தரமானவர்களை முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகளாகப் பாராளுமன்றத்திற்கு அனுப்புகின்ற திறனுடைய ஒரு தலைமைத்துவ வெற்றிடம் எமது சமூகத்தில் நிலவுவது வேதனை!
அம்பாரையில் மயில் கட்சி ஆசனத்தைப் பெற்றுக்கொள்ளாது -   அரசியல் ஆய்வாளர் பாத்திமா சிபானா சரிபுதீன் அம்பாரையில் மயில் கட்சி ஆசனத்தைப் பெற்றுக்கொள்ளாது -   அரசியல் ஆய்வாளர் பாத்திமா சிபானா சரிபுதீன் Reviewed by Admin on October 13, 2024 Rating: 5

No comments:

Responsive Advertisement 3