Responsive Advertisement 2

செலவு அறிக்கை குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு

 


ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது பிரசார செலவு அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடையவுள்ளது.

குறித்த அவகாசம் இன்று (13) பிற்பகல் 03.00 மணியுடன் நிறைவடைவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் செலவின ஒழுங்குமுறை சட்டத்தின்படி, ஜனாதிபதி தேர்தல் முடிந்த 21 நாட்களுக்குள் செலவு அறிக்கைகளை வழங்க வேண்டும்.

எவ்வாறாயினும், அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தோற்றிய 38 வேட்பாளர்களில் 18 வேட்பாளர்களே இதுவரை தமது செலவின அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஏனைய வேட்பாளர்கள் தங்களது செலவு அறிக்கையை இன்று வழங்குவார்கள் என்று எதிர்பார்ப்பதாக தேர்தல் ஆணைக்குழு நம்பிக்கை வௌியிட்டுள்ளது.

மேலும், தேர்தல் செலவின ஒழுங்குமுறை சட்டத்தின்படி செலவு அறிக்கையை வழங்காத வேட்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

செலவு அறிக்கை குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு செலவு அறிக்கை குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு Reviewed by Admin on October 13, 2024 Rating: 5

No comments:

Responsive Advertisement 3